🤫பிரெஞ்சு கற்றுக்கொள்வதற்கான ஒரு ரகசியம்
இது மொழிக்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் !
வணக்கம் !
இன்று, நான் ஒரு ரகசியத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சமீபத்தில் ஒரு ஆங்கிலப் புத்தகம் வாசித்தேன். அதில், வாழ்க்கையில் வெற்றிக்கு மிக முக்கியமானது நம்முடைய Attitude என்று சொல்லப்பட்டது. அதாவது, “Attitude” என்பது நம்முடைய அணுகுமுறை, மனப்பான்மை குறிக்கும்.
பிரெஞ்சு கற்றுக்கொள்ள நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள் என்று நீங்கள் எண்ணியிருக்கலாம். ஆம், பிரெஞ்சில் நிறைய விதிகள், கடினமான சொற்கள், வித்தியாசமான உச்சரிப்பு, வினைச்சொல் வகைகள் என்று பல சிரமங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த மொழியை கற்க முக்கியமானது, இவற்றை அனைத்தையும் எதிர்கொள்ளும் உங்கள் மனப்பான்மையும், அணுகுமுறையாகும் !
நான் பிரான்சுக்கு வந்த போது, என்னுடைய அணுகுமுறை சரியில்லை என்பதை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். எல்லாம் கடினமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை. உண்மையில், எனக்கு எந்த ஒரு ஆர்வமும், எந்த ஊக்கமும் இருந்ததில்லை. ஒரு புதிய காலத்தை படிக்கும் போது, இன்னொரு புதிய விதியை படிக்கும்போது,
‘ஐயோ , இதை மொழியை படிக்காமல் விட்டுவிடலாம்’ என்ற எண்ணம் தான் தோன்றியது.
ஆனால், அதற்குப் பிறகு, நான் என்னுடைய அணுகுமுறையை மாற்றினேன்.
‘ஆமாம், இது கடினமாக இருக்கிறது, இருந்தாலும் நான் ஒரு புதிய விஷயத்தை கற்றுகொள்கிறேன். இது எனக்கு ஒரு நாள் உதவலாம்’
என்ற மாற்றம் தான் எனக்கு கடினாமான நேரங்களில் உதவியாக இருந்தது. எனக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வைத்தது.
அதனால்தான், நான் உங்களோடு பகிர விரும்புகிறேன் :
✅ பிரெஞ்சு கற்றுக்கொள்ள முக்கியமானது உங்கள் மனப்பான்மையை மாற்றுவது.
நம்பிக்கையுடன், ஆர்வத்துடன், கற்றலை ஒரு புதிய அனுபவமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இது மொழிகற்றலுக்கு மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் பொருந்தும்.
அனைவருக்கும் என் வாழ்த்துகள்,
தீபக் 🙏🏽
மேலும் என்னோடு பிரெஞ்சு கற்க விரும்புகிறீர்களா ?