அனைவருக்கும் வணக்கம்,
நீங்கள் பிரெஞ்சு கற்றுகொள்ள ஆர்வமாக இருப்பினும்,
நீங்கள் இன்று ஒரு புதிய வார்த்தை கற்றுக்கொண்டீர்களா?
இந்த வாரத்தில் இன்னொரு புதிய வாக்கியம் பேச முயற்சித்தீர்களா ?
இது உங்களுக்கு சிறிய முயற்சியாக தோன்றலாம்…
ஆனால் உங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் ஒரு சக்தி இதில் இருக்கிறது.
அமெரிக்க எழுத்தாளர் James Clear சொல்வது போல :
“If you get 1% better every day, you’ll end up 37 times better by the end of the year.”
நீங்கள் ஒவ்வொரு நாளும் 1% முந்தின நாளைவிட மேம்பட்டவராக மாறினால், வருட இறுதியில் நீங்கள் 37 மடங்கு சிறந்தவராக இருப்பீர்கள்.
இந்தக் கருத்தை உங்கள் வாழ்க்கையிலும், மொழியிலும் பயன்படுத்துங்கள்.
உதாரணத்திற்கு பிரெஞ்சு கற்க விரும்பினால்
இன்று ஒரு புதிய வார்த்தையை, வசனத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
நாளை அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு தேடுங்கள்.
வாரம் ஒரு வீடியோ பாருங்கள்.
மாதம் ஒன்றுக்கு ஒரு சிறிய உரையாடலை முயற்சியுங்கள்.
நாம் நினைப்பதைவிட இது மெதுவானது தான், ஆனால் மிகவும் சக்திவாய்ந்தது.
நாம் இன்று 1% மேம்பட முடியும்:
ஒரு நல்ல பழக்கத்தால்
உங்கள் நோக்கிய ஒரு சிறிய முயற்சியால்
ஒரு புத்துணர்ச்சியான சிந்தனையால்
உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், தினமும் ஒரு சிறிய படி எடுத்து முன்னேறுங்கள். தினமும் சிறிய வெற்றிகளை அடையுங்கள்.
இன்று 1% மேம்பட என்ன செய்யப்போகிறீர்கள்?
அன்புடன்,
தீபக் 🙏🏽